0
மட்டக்களப்பில் ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றிவரும் பட்டதாரிகள் இன்று திங்கட்கிழமை (8) காந்தி பூங்காவில் முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலைகளில் கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பட்டதாரிகள் ஒன்றியம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது
இதனையடுத்து காந்தி பூங்காவில் முன்னாள் இன்று காலை 9 மணிக்கு ஒன்றுதிரண்ட நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் “பட்டம் பெற்ற எங்களை ஏன் மட்டம் தட்டுகின்றீர்கள்”, “பேர்டி பரீட்சை மட்டும் தான் தகுதியா?”, “நாங்கள் கற்பித்து பெறுபேறு வரவில்லையா?” “ஒரே பணி ஒரே அங்கீகாரம் ஆசிரியர் வேண்டும்”, “எங்கள் உழைப்பை மதியுங்கள் உரிமையை வழங்கு”, “அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அல்ல ஆசிரியரகவே அங்கீகரிக்கவும்”, எங்கள் விடயத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை பெற்றுத்தருமா அரசு?”, “எங்களுக்கு ஆசிரியர் நிரந்தர நியமனத்தை வழங்கு“ போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.