• Mon. Mar 17th, 2025

24×7 Live News

Apdin News

மட்டக்களப்பில் வாகன விபத்தில் மௌலவி ஒருவர் மரணம்!

Byadmin

Mar 16, 2025


மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மௌலவி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில்  42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான காத்தான்குடி முகைதீன் பஸ்ளிவாசல் மௌலவி எம்.எஸ்.எம். ஸபீர் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த அரச போக்குவரத்து பஸ் ஒன்று  மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பின்பகுதியில் இருந்து பயணித்த  மௌலவி  உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

By admin