• Tue. Nov 19th, 2024

24×7 Live News

Apdin News

மணிப்பூர்: மீண்டும் கலவரம்- அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் குறி வைக்கப்படுகிறார்களா?

Byadmin

Nov 18, 2024


மணிப்பூரில் கலவரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இம்பாலில் நடந்த சமீபத்திய கலவரத்தில், எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களின் வாகனங்களைக் மக்கள் குறி வைத்தனர்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. சனிக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில், இம்பால் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள சில எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வாகனங்கள் எரியூட்டப்பட்டன.

”இம்பாலில், கோபமடைந்த சில போராட்டக்காரர்கள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ உட்பட சில மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள் மற்றும் உடமைகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தினர்” என்று மணிப்பூர் போலீசார் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

காவல்துறையின் இந்த நடவடிக்கையின் போது எட்டு நபர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, உள்ளூர் நிர்வாகம் இம்பால் உட்பட பல இடங்களில் ஊரடங்கை அமல்படுத்தியது. இதுமட்டுமின்றி, சில இடங்களில் இணையச் சேவையும் தடைச் செய்யப்பட்டது.

பி.டி.ஐ செய்தி முகமையின் கூற்றுபடி, மாநிலத்தின் ஆறு காவல் நிலையப் பகுதிகளில் இருந்து AFSPA சட்டத்தை(ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம்) நீக்க வேண்டும் என்று மணிப்பூர் அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

By admin