• Tue. Feb 4th, 2025

24×7 Live News

Apdin News

மதகஜராஜா: வருடங்களாக வெளியாகாமல் இருக்கும் துருவ நட்சத்திரம் போன்ற படங்களுக்கு உதவுமா

Byadmin

Feb 3, 2025


பல வருடங்களாக வெளியாகாமல் இருக்கும் துருவ நட்சத்திரம் போன்ற படங்களுக்கு மதகஜராஜாவின் வெற்றி உதவுமா

பட மூலாதாரம், @OndragaEnt

விஷால் நடிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில், 12 வருடங்கள் கழித்து வெளியான மதகஜராஜா திரைப்படம் பெற்றிருக்கும் வரவேற்பு மற்றும் வசூல் ரீதியிலான வெற்றி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

“மதகஜராஜாவின் வெற்றி எனக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் எனது ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை நிச்சயம் வெளியிடுவோம். எத்தனை வருடங்கள் கழித்து வெளியானாலும், ஒரு படத்திற்கு கிடைக்க வேண்டிய வரவேற்பு கிடைக்கும் என்பதை மதகஜராஜா உணர்த்தியுள்ளது”

சமீபத்தில் ஒரு தனியார் ஊடகத்தின் பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார் இயக்குநர் மற்றும் நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன்.

மதகஜராஜாவின் வெற்றி இயக்குநர் கௌதமுக்கு மட்டுமல்லாது, அனைத்துப் பணிகளும் முழுமையடைந்து, வெளியிடப்படாமல் முடங்கிக் கிடக்கும் பல தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு ஊக்கத்தை அளித்துள்ளது என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

By admin