• Thu. Sep 10th, 2026

24×7 Live News

Apdin News

‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’- தவெக கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

Byadmin

Sep 10, 2026


மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தவெக கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைக்கும் இரண்டாவது கூட்டம் இன்று (செப்டம்பர் 09) சென்னையில் நடந்து முடிந்துள்ளது.

இந்தக் கூட்டத்தின் முடிவில், தவெக கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்துடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப். 9) சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஆனால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முன்னரே அறிவித்திருந்தன.

By admin