• Mon. Mar 16th, 2026

24×7 Live News

Apdin News

‘மதம் மாறுவதை 60 நாள் முன்பே கூறுவது கட்டாயம்’ – மகாராஷ்டிர மத சுதந்திர மசோதாவால் என்ன சர்ச்சை

Byadmin

Mar 16, 2026


மாநில அரசு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது 'மகாராஷ்டிரா மத சுதந்திரச் சட்டம் 2026' மசோதாவை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ​​மாநில அரசு ‘மகாராஷ்டிரா மத சுதந்திரச் சட்டம் 2026’ மசோதாவை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.

மாநில அரசு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ‘மகாராஷ்டிரா மத சுதந்திரச் சட்டம் 2026’ மசோதாவை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தியது.

இருப்பினும், எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்போது மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்த விவாதத்தில் தங்களது நிலைப்பாட்டை முன்வைப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

இந்த மசோதாவுக்கு சில நாட்களுக்கு முன்பு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்தச் சட்டத்துக்காக, மதமாற்றம் தொடர்பான சட்ட சிக்கல்களை ஆய்வு செய்ய காவல்துறை தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவை மாநில அரசு நியமித்திருந்தது.

மாநிலத்தில் உள்ள பல்வேறு சட்டங்களை ஆய்வு செய்த பிறகு, இக்குழு மகாராஷ்டிரா மத சுதந்திரச் சட்டத்தைப் பரிந்துரைத்தது. இதனைத் தொடர்ந்து, இந்த மசோதா தற்போது சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

By admin