• Thu. Aug 21st, 2025

24×7 Live News

Apdin News

மதராஸ் vs சென்னை: எது முதலில் வந்த பெயர்? கல்வெட்டில் என்ன உள்ளது?

Byadmin

Aug 21, 2025


மதராஸ் vs சென்னை: எது முதலில் வந்த பெயர்? வரலாற்று பார்வை

பட மூலாதாரம், Getty Images

“மெட்ராஸை சுத்திப் பார்க்க போறேன்” என்பதில் தொடங்கி “சென்னை போல வேற ஊரே இல்லை” என்பது வரை பல்வேறு பாடல்கள் சென்னையை மையப்படுத்தி உள்ளன.

நவீன சென்னைக்கு நாளை (ஆகஸ்ட் 22) 386-வது பிறந்தநாள், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் நாயக்க மன்னர்களிடமிருந்து நிலம் வாங்கப்பட்ட நாள் சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நகரத்திற்கு சென்னை எனப் பெயர் வந்ததன் பின்னணி என்ன, மதராஸ் என்பது எப்போது சென்னையாக மாறியது. அப்போது நடந்தவை என்ன?

சென்னை என்பது தமிழ்ப்பெயர், மதராஸ் என்பது பிரிட்டிஷ் வழங்கிய பெயர் என்கிற ஒரு கருத்து உள்ள நிலையில் பிரிட்டிஷ் இங்கு வருவதற்கு முன்பே மதராஸ் என்கிற பெயர் வழக்கத்தில் இருந்ததாகக் கூறுகிறார் வரலாற்று ஆய்வாளரான வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்.

By admin