• Wed. Aug 20th, 2025

24×7 Live News

Apdin News

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம் | Mallai Sathya Temporary removal from MDMK

Byadmin

Aug 20, 2025


பூந்தமல்லி: முன்​னாள் முதல்​வர் அண்ணா பிறந்​த​நாள் விழா செப். 15-ம் தேதி காஞ்​சிபுரத்​தில் மதி​முக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலை​மை​யில் நடை​பெற உள்​ளது. இவ்​விழா தொடர்​பாக சென்னை மண்டல அளவி​லான ஆலோசனைக் கூட்​டம், நேற்று திரு​வள்​ளூர் மாவட்​டம், பூந்​தமல்லி அருகே நசரத்​பேட்​டை​யில் உள்ள தனி​யார் திருமண மண்டபத்தில் நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்ற மதி​முக துணை பொதுச் செய​லா​ளர் மல்லை சத்​யா​வுக்​கு, கட்சி நிர்​வாகி​கள் சால்வை, வீர​வாள் வழங்​கினர். இந்த கூட்​டத்​தில், சென்​னை, திரு​வள்​ளூர், செங்கை உள்​ளிட்ட மாவட்​டங்​களுக்​கும், தாம்​பரம் மாநக​ராட்​சிக்​கும் புதிய நிர்​வாகி​கள் அறிவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் மல்லை சத்யா தெரி​வித்​த​தாவது: காஞ்​சிபுரத்​தில் செப். 15-ம் தேதி நடை​பெற உள்ள அண்ணா பிறந்​த​நாள் விழா​வில், மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோவுக்கு திரா​விட ரத்னா விருது வழங்க இருக்​கிறோம். அதனை வைகோ பெற்​றுக் கொள்ள வேண்​டும் என விரும்​பு​கிறேன்.

மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ சார்​பில், 15 நாட்​களில் நான் விளக்​கம் அளிக்க வேண்​டும் என, எனக்கு கடிதம் அனுப்​பப்​பட்​டுள்​ள​தாக தகவல் வந்​துள்​ளது. நான் உடனடி​யாக நேரில் விளக்​கம் அளிக்க தயா​ராக இருக்​கிறேன். நாள், நேரத்தை வைகோ​தான் அறிவிக்க வேண்​டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்​பாக மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ அனுப்​பிய கடிதத்​தில், “கட்​சி​யின் சட்ட திட்​டங்​களை மீறி ஒழுங்​கீன​மாக நடந்து கொள்​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்து வரு​வ​தால், மல்லை சி.ஏ.சத்​யாவை கட்​சி​யின் அனைத்து பொறுப்​பு​களில் இருந்​தும் தற்​காலிகமாக நீக்கிவைக்க உத்​தர​விடப்​படு​கிறது.

ஒழுங்கு நடவடிக்​கைக்கு உட்​பட்டு கட்​சி​யின் உடமை​கள், ஏடு​கள், பொறுப்​பு​கள், கணக்​கு​கள் அனைத்​தை​யும் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளரிடம் ஒப்​படைக்க வலி​யுறுத்​தப்​படு​கிறது. அவரது கருத்​துக்​கோ, செயல்​பாட்​டுக்கோ மதி​முக பொறுப்​பேற்​காது. அவர் மதிமுக கட்சி பெயரையோ, கொடியையோ பயன்​படுத்​தக் கூடாது. மதி​முக தலைமை நிர்​வாகி​கள் குறித்து கருத்து பதிவு செய்​யக் கூடாது” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



By admin