• Thu. Jan 23rd, 2025

24×7 Live News

Apdin News

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்த மத்திய அரசு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்ன?

Byadmin

Jan 23, 2025


மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்த மத்திய அரசு

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, டங்ஸ்டன் சுரங்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில், அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளம் மற்றும் பல கலாச்சார பாரம்பரிய தளங்கள் உள்ளன

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிம ஏலத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

இந்த சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வந்தநிலையில், உள்ளூர் மக்கள் டெல்லியில் நேற்று (22 ஜனவரி) மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘டங்ஸ்டன் சுரங்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில், அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலம் மற்றும் பல கலாச்சார பாரம்பரிய தலங்கள் உள்ளன என்று விவசாயிகள் குழுவினர் மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்’ என்றும் மத்திய அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரிவான விவாதங்களுக்குப் பிறகு, இப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தலத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.



By admin