• Fri. Jan 9th, 2026

24×7 Live News

Apdin News

மதுரை: காவல் மரணத்தில் கணவரை இழந்து 27 ஆண்டுகளாக நீதிக்குப் போராடும் பெண்ணின் கதை

Byadmin

Jan 9, 2026


காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்ட கணவர்: 27 ஆண்டுகளாக நீதிக்குப் போராடும் தாயும் மகனும்

கால் நூற்றாண்டிற்கு முன்பு மதுரை மாவட்டத்தில் ஒரு காவல் நிலையத்தில் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு தம்பதி கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதில் கணவர் உயிரிழந்தார்.

அந்தச் சம்பவம் நடந்தபோது பள்ளி மாணவராக இருந்த அவரது மகன் இப்போது வழக்கறிஞர். இந்த விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டுமென தாயும் மகனும் இன்னமும் விரும்புகின்றனர். 27 ஆண்டுகளைத் தாண்டித் தொடரும் ஒரு போராட்டத்தின் கதை இது.

காணொளிக் குறிப்பு,

கணவரை தேடி வந்து மனைவியை கொண்டு சென்ற போலீஸ்

மதுரை நகரத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் இருக்கும் உசிலம்பட்டியில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது அந்த கிராமம். அங்கிருக்கும் குறுகிய தெரு ஒன்றில் உள்ள வீட்டின் வாசலில் அமர்ந்திருக்கிறார் அந்தப் பெண்மணி.

அவருடைய மெல்லிய தோற்றத்தைப் பார்த்தால், 27 ஆண்டுகளாகப் போராடும் ஒரு நபரைப் போலத் தெரியாது. ஆனால், அவர் பேசத் தொடங்கும்போது அவரது குரலில் தொனிக்கும் உறுதி அந்தச் சந்தேகத்தை உடைத்துவிடும்.

அது 1998ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 27ஆம் தேதி. காலை ஏழு மணி. தனது வயல்காட்டில் இந்தப் பெண்மணியும் வேறு சில பெண்களுமாக சுமார் பத்து பேர் சேர்ந்து பருத்தி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது உசிலம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த சில காவலர்கள், அங்கே வந்தனர்.

By admin