இஸ்லாமியருக்கு மீனாட்சி மாலை – சித்திரைத் திருவிழாவில் நல்லிணக்க நெகிழ்ச்சி
மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு நிகழ்வாக நேற்று வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மன் வீதி உலா நடைபெற்றது. இந்த வீதி உலாவின் போது சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள முஹைதீன் ஆண்டவர் தர்கா முன்பு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் குளிர்பானம் வழங்கினர். அப்போது, அம்மனுக்கு போடப்பட்ட மாலையை தெற்கு வாசல் ஜமாஅத்தைச் சேர்ந்த கமர்தீனுக்கு அணிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கமர்தீன், “கடந்த 10 ஆண்டுகளாக தெற்குவாசல் ஜமாஅத் சார்பாக சித்திரைத் திருவிழாவைக் காண வரும் பக்தர்களுக்கு ரோஸ் மில்க் மற்றும் பூந்தி வழங்கி வருகிறோம். நேற்று மாலை அணிவித்த நிகழ்வு இதுவரை இல்லாத ஒரு நிகழ்வு புதிதாக நடைபெற்றது” என்றார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு