• Wed. Jan 1st, 2025

24×7 Live News

Apdin News

மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம்: மத்திய அரசின் மறுஆய்வு முடிவால் என்ன நடக்கும்? தமிழ்நாடு அரசு கூறியது என்ன?

Byadmin

Dec 29, 2024


அரிட்டாபட்டி டங்க்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டம்

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, கனிம சுரங்க எல்லைகளை மாற்றி அமைப்பது தொடர்பாக இந்திய புவியியல் துறைக்கு மத்திய சுரங்க அமைச்சகம் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது

மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைய உள்ள பகுதியை மறு ஆய்வு செய்யுமாறு இந்திய புவியியல் துறைக்கு (GSI) மத்திய சுரங்க அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

முதலமைச்சரின் கடிதத்தைத் தொடர்ந்தே மத்திய சுரங்க அமைச்சகம் இப்படியொரு முடிவை எடுத்துள்ளதாக தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஏல அறிவிப்பை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடர உள்ளதாக, டங்ஸ்டன் கனிமத் திட்ட எதிர்ப்பு போராட்ட குழு அறிவித்துள்ளது.

அரிட்டாபட்டியில் இந்திய புவியியல் துறை மறு ஆய்வு நடத்துவதால் என்ன நடக்கும்? சூழலியல் நிபுணர்கள் கூறுவது என்ன?

By admin