• Sun. Aug 24th, 2025

24×7 Live News

Apdin News

மதுரை மாநாடு வெற்றி; மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே இலக்கு: விஜய் கடிதம் | TVK chief Vijay letter to Cadres

Byadmin

Aug 24, 2025


சென்னை: மதுரை மாநாட்​டின் வெற்றி என்​பது, உங்​கள் ஒவ்​வொரு​வரின் உழைப்​பிலும், பங்​களிப்​பிலும் மட்​டுமே சாத்​தி​ய​மாகி இருக்​கிறது. மனசாட்சி உள்ள மக்​களாட்​சியை நிலை​நாட்​டு​வது மட்​டுமே நம் இலக்கு என்று தவெக தலை​வர் விஜய் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து கட்​சித் தொண்​டர்​களுக்கு அவர் எழு​தி​யுள்ள கடிதம்: மதுரை​யில் நடந்த 2-வது மாநில மாநாட்​டின் வெற்றி என்​பது உங்​கள் ஒவ்​வொரு​வரின் உழைப்​பிலும், பங்​களிப்​பிலும் மட்​டுமே சாத்​தி​ய​மாகி இருக்​கிறது. எத்​தனை மறை​முகத் தடைகள் உரு​வாக்​கப்​பட்​டாலும், நமக்​காக மக்​கள் கூடும் திடல்​கள் எப்​போதும் கடல்​களாகத்​தான் மாறும் என்​பதை உணர்ந்​து,மாநாட்​டுப் பணி​களை சிறப்​புடன் மேற்​கொண்ட நிர்​வாகி​கள் உள்​ளிட்ட அனை​வருக்​கும் மனம் நிறைந்த பாராட்​டை​யும், நன்​றியை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

நம் மீது வீசப்​படும் விமர்​சனங்​களில் நல்​ல​வற்றை மட்​டும் நமதாக்கி உரமேற்​று​வோம். மற்​றவற்றை புறந்​தள்​ளிப் புன்​னகைப்​போம். மக்​களோடு மக்​களாக இணைந்து நிற்​கும் மக்​கள் அரசி​யல் மட்​டுமே, நமது நிரந்தர அரசி​யல் நிலைப்​பாடு. மனசாட்சி உள்ள மக்​களாட்​சியை நிலை​நாட்​டு​வது மட்​டுமே நம் இலக்​கு.

1967, 1977 தேர்​தல் அரசி​யல் வெற்றி விளைவு​களை வரும் 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலிலும் தமிழ் மக்​கள் நிகழ்த்​திக் காட்​டப் போவது நிச்​ச​யம். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.



By admin