• Wed. Apr 8th, 2026

24×7 Live News

Apdin News

“மதுரை வீரனை வழிபட முடியவில்லை” – கரூர் அருகே சாதி பாகுபாடு பிரச்னையில் பிபிசி நடத்திய கள ஆய்வு

Byadmin

Apr 8, 2026


கரூர் கிராமத்தில் அருந்ததிய மக்களிடம் சாதிய பாகுபாடுகள் காட்டப்படுகிறதா? பிபிசி தமிழ் கள ஆய்வு
படக்குறிப்பு, தெத்தப்பட்டி ஊராட்சியில் பொதுவான ஊராட்சி கிணற்றை மூடி பிற சாதியினர் கோவில் கட்டுவதால் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகக் கூறுகிறார் அங்கு வசிக்கும் கீதா

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

‘பிரச்னைகளைப் பேசுவோம்’ என்ற தலைப்பில் பிபிசி தமிழ் மேற்கொண்டு வரும் முயற்சியின் தொடர்ச்சியாக வெளியாகும் இரண்டாவது கட்டுரை இது.

தங்கள் பகுதிகளில் நிலவும் பல்வேறு சாதிப் பிரச்னைகள் குறித்த தகவல்களை பிபிசி தமிழிடம் மக்கள் பகிர்ந்துள்ளனர். அந்த வகையில், “எங்கள் ஊரில் ஆலய வழிபாடு முதல் இடுகாடு வரை பல்வேறு துயரங்களை அருந்ததிய சாதி மக்கள் எதிர்கொள்கின்றனர்” என கரூர் மாவட்டத்தின் தெத்துப்பட்டி கிராமத்தில் இருந்து பிபிசி தமிழுக்கு தகவல் கிடைத்தது.

அந்தக் கிராமத்துக்கு பிபிசி தமிழ் குழு சென்று கள ஆய்வில் ஈடுபட்டபோது கிடைத்த தகவல்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் உள்ள பள்ளபட்டி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் தெத்துப்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த ஊராட்சியில் விவசாயம் மற்றும் அவை சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ளன.

தெத்துப்பட்டி ஊராட்சிக்குள் ஊத்துப்பட்டி என்ற ஊர் அமைந்துள்ளது. ஊரின் வலதுபுறத்தில் சுமார் 30 அருந்ததிய குடும்பங்களும் இடதுபுறத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாற்று சாதி குடும்பங்களும் வசித்து வருகின்றன.

By admin