• Sat. Feb 7th, 2026

24×7 Live News

Apdin News

மத்தியப் பிரதேசம்: தேனீக்களிடமிருந்து 25 குழந்தைகளின் உயிரைக்காப்பாற்றி, உயிர்நீத்த அங்கன்வாடி ஊழியர்

Byadmin

Feb 7, 2026


மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தின் ரன்பூர் கிராமத்தில் நீங்கள் யாரிடம் பேசினாலும், அவர்கள் காஞ்சன் பாயின் துணிச்சலையும் தைரியத்தை பற்றியுமான  விஷயத்தையே சொல்கிறார்கள்.

பட மூலாதாரம், Puneet Barnala

படக்குறிப்பு, 55 வயதான அங்கன்வாடி உதவியாளர் காஞ்சன் பாய், குழந்தைகளைக் காப்பாற்ற தேனீக்களோடு போராடினார்.

“காஞ்சன் பாய் துணிச்சலோடு செயல்படாமல் இருந்திருந்தால், எத்தனை குழந்தைகள் இறந்திருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்.”

மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தின் ரன்பூர் கிராமத்தில் நீங்கள் யாரிடம் பேசினாலும், அவர்கள் காஞ்சன் பாயின் துணிச்சலையும் தைரியத்தை பற்றியுமான விஷயத்தையே சொல்கிறார்கள்.

மாவட்ட தலைமையகத்திலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரன்பூரின் அங்கன்வாடி வளாகம், பிப்ரவரி 2 ஆம் தேதி திங்கள் கிழமை பிற்பகல் தேனீக்களின் தாக்குதலுக்கு உள்ளானது.

குழந்தைகளின் சிரிப்பும் குறும்பும் வழக்கமாகக் கேட்கும் இடத்தில், திடீரென்று அலறல் சத்தமும் கூச்சலும் எழும்புகின்றன.

அதே அங்கன்வாடி வளாகத்தில் ஆரம்பப் பள்ளி மதியம் 2 மணி முதல் இயங்குகிறது, அங்கன்வாடியைச் சுற்றி கூடியிருந்த குழந்தைகளை தேனீக்கள் கூட்டம் தாக்கியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். அப்போது வளாகத்தில் சுமார் 20 முதல் 25 குழந்தைகள் இருந்தனர்.

By admin