• Sat. Apr 18th, 2026

24×7 Live News

Apdin News

மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் இரு போர் நிறுத்தங்கள்; அமெரிக்கா – இரான் பேச்சுக்கு வலுசேர்க்குமா?

Byadmin

Apr 18, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், போர் நிறுத்தம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, போர்நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு, இடம்பெயர்ந்த மக்கள் தெற்கு லெபனானில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கினர்.

மத்திய கிழக்குப் பகுதி முழுவதும் ஒன்று அல்ல, மாறாக இரண்டு போர் நிறுத்தங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், இரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனைகளுக்கு களம் இப்போது தயாராகியுள்ளதா?

இரான் மற்றும் லெபனானில் நடைமுறையில் உள்ள போர் நிறுத்தங்கள் இரண்டும் ‘நிலையற்றவை’ என்றே விவரிக்கப்படுகின்றன (பொதுவாகவே போர் நிறுத்தங்கள் அப்படித்தான் இருக்கும்); ஆயினும், போரின் இரைச்சல் மீண்டும் ஓய்ந்துவரும் இவ்வேளையில், இது வாய்ப்புகள் நிறைந்த, அதே சமயம் ஆபத்துகளும் நிறைந்த ஒரு தருணமாகத் திகழ்கிறது.

மேலோட்டமாகப் பார்க்கையில், இஸ்ரேலுக்கும் இரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா ஆயுதக் குழுவுக்கும் இடையிலான சண்டையில் 10 நாட்கள் இடைநிறுத்தம் குறித்து வியாழக்கிழமை இரவு வெளியான அறிவிப்பு, இரானுக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகும்.

தெஹ்ரானில் உள்ள ஆட்சி லெபனானில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வந்தது, அது இல்லாமல் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படுவதை எதிர்பார்க்க முடியாது என தெரிவித்தது.

இப்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஹோர்மூஸ் நீரிணை “முழுமையாக திறக்கப்படும்” என இரான் தெரிவித்துள்ளது.

By admin