• Sun. Mar 29th, 2026

24×7 Live News

Apdin News

மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் சர்வதேச விமான பயணங்களை எவ்வாறு மாற்றக்கூடும்?

Byadmin

Mar 27, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், விமான சேவை, துபை, அபுதாபி, தோஹா

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்லும் நீர்மீது இறங்கக்கூடிய விமானங்கள், வழியில் தங்கிச் செல்வதற்கான ஒரு தூசு நிறைந்த சிறிய நிறுத்தமாகவே துபை ஒரு காலத்தில் இருந்தது.

பின்னர், 1960களில், பாலைவன மணலால் ஆன ஒரு சாதாரண ஓடுதளத்தைக் கொண்டு, பிற கவர்ச்சிகரமான இடங்களுக்குச் செல்லும் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடமாக இது செயல்பட்டது.

ஆனால் இன்று, உலக விமானப் போக்குவரத்துத் துறையின் முக்கிய தூண்களில் ஒன்றாக துபை திகழ்கிறது. துபை சர்வதேச விமான நிலையம் (டிஎக்ஸ்பி ) அதன் இதயத் துடிப்பாக மாறியுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டில், 92 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள், அதன் பளபளப்பான பளிங்குத் தளங்கள் மற்றும் ஒளிவீசும் வணிக வளாகங்கள் வழியாகப் பயணம் செய்துள்ளனர்.

இதனால், சர்வதேச பயணிகளுக்கான உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக துபை சர்வதேச விமான நிலையம் (டிஎக்ஸ்பி) விளங்குகிறது. உதாரணமாக, சுமார் 83 மில்லியன் பயணிகளைக் கையாண்ட லண்டன் ஹீத்ரோவை இது முந்தியுள்ளது.

By admin