• Wed. Jan 21st, 2026

24×7 Live News

Apdin News

மத்திய கிழக்கில் மாறும் சூழல் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் சில மணி நேர இந்திய பயணம் உணர்த்துவது என்ன?

Byadmin

Jan 21, 2026


ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு, ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் திங்கள்கிழமை இந்தியா வந்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், திங்களன்று சில மணி நேர பயணமாக டெல்லிக்கு வருகை தந்தார்.

இந்த வருகை, டிசம்பர் 2021-இல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்ததை நினைவுபடுத்துவதாக அமைந்தது. அப்போது புதின் ஐந்து மணிநேரம் மட்டுமே தங்கியிருந்தார். கோவிட்-19 பெருந்தொற்று அவரது அந்த குறுகிய பயணத்திற்கு காரணமாகக் கூறப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இரானுக்கான முன்னாள் இந்திய தூதர் கே.சி. சிங் ‘தி ட்ரிப்யூன்’ இதழில் எழுதியுள்ள கட்டுரையில், இந்த வருகை குறித்து முன்கூட்டியே தகவல்கள் வெளியாகாதது, வளைகுடா மற்றும் மேற்கு ஆசியாவில் வேகமாக மாறிவரும் புவிசார் அரசியல் சூழலால் நிலைமை இயல்பாக இல்லை என்பதைக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் டெல்லியில் வந்திறங்கியபோது, இந்திய பிரதமர் நரேந்திர மோதி நேரில் சென்று அவரை வரவேற்றார். பிரதமர் மோதி ஒரு சில உலகத் தலைவர்களுக்கு மட்டுமே இத்தகைய வரவேற்பை அளிக்கிறார்.

கடந்த மாதம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் பாகிஸ்தானுக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார். டெல்லி பயணத்தின் கால அளவு சில மணிநேரமே என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

By admin