• Fri. Jul 10th, 2026

24×7 Live News

Apdin News

மத்திய கிழக்கில் மீண்டும் மோதல் – இரானுடன் சண்டையை நிறுத்த டிரம்புக்கு உள்ள ஒரே சிறந்த வழி என்ன?

Byadmin

Jul 10, 2026


'எடுபடாத மிரட்டல்கள்' - இரானுடன் மோதலை நிறுத்த டிரம்புக்கு உள்ள ஒரே சிறந்த வழி என்ன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜெர்மி போவன்
    • பதவி, சர்வதேச ஆசிரியர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இரான் தொடர்பாகவும், பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாடு எட்டப்படும் சாத்தியம் குறித்தும் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்டுள்ள கருத்துகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், டிரம்ப் அமெரிக்காவின் அதிபர்.

துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் பின்வருமாறு கூறினார்.

“இனி அவர்களுடன் எனக்கு எந்தத் தொடர்பும் தேவையில்லை. அவர்கள் மதிப்பற்றவர்கள். மதிப்பற்றவர்கள் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் மிக மோசமான மனநிலை கொண்டவர்கள். மோசமான மனநிலை கொண்டவர்களால் அவர்கள் வழிநடத்தப்படுகிறார்கள். மேலும் அவர்கள் கொடூரமான, வன்முறை குணம் கொண்டவர்கள்.”

“அவர்களிடம் அணுஆயுதங்கள் இருந்தால், அவர்கள் அதைப் பயன்படுத்துவார்கள். என்னைப் பொறுத்தவரை, இது முடிந்துவிட்டது” என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

ஆனால், இந்த விஷயத்தில் இவைதான் அவரது கடைசி வார்த்தைகளா? நிச்சயமாக இல்லை.

By admin