• Tue. Mar 3rd, 2026

24×7 Live News

Apdin News

மத்திய கிழக்கு நாடுகளில் அச்சத்தில் தமிழக மீனவர்கள் – தவிக்கும் குடும்பங்கள்

Byadmin

Mar 3, 2026


மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்களின் நிலை என்ன?
படக்குறிப்பு, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ராஜேந்திரன்

“அடிக்கடி குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்கின்றன. நடுவானில் தடுத்து நிறுத்தி அழிக்கப்படும் குண்டுகளின் ஒரு பகுதி கடலில் விழுவதைக் காண முடிகிறது,” என்கிறார் பஹ்ரைன் நாட்டில் வசிக்கும் தமிழ்நாட்டு மீனவரான நவீன்.

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவிவரும் நேரத்தில் தமிழ்நாட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கின்றனர். பதற்றம் காரணமாக கடந்த நான்கு நாட்களாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடந்த சனிக்கிழமை இரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்கான இரானின் எதிர்வினை அந்தப் பிராந்தியம் முழுவதும் விரிவிடைந்துள்ளது.

இந்த நிலையில், மீன்பிடித் தொழிலுக்காக தமிழ்நாட்டிலிருந்து இருந்து மத்திய கிழக்கு நாடுகளான துபை, பஹ்ரைன், இரான், ஓமன் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

“கடலில் விழுந்த குண்டுகள்”

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவரான நவீன் தற்போது பஹ்ரைனில் உள்ளார். எங்கு திரும்பினாலும் வெடி சத்தமாக கேட்கிறது என்றும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

By admin