• Mon. Feb 2nd, 2026

24×7 Live News

Apdin News

மத்திய பட்ஜெட்டில் தங்கப் பத்திரங்கள் உட்பட 5 விதிகளில் மாற்றம் – மக்களை எப்படி பாதிக்கும்?

Byadmin

Feb 2, 2026


நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, பட்ஜெட் உரையில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன, அவை நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையைக் கேட்ட பிறகு, அதில் சாமானிய மக்களுக்குச் சிறப்பானதாக எதுவும் இல்லை என்று பலர் நினைத்திருக்கலாம்.

பட்ஜெட்டில் அதிக கவனம் பெறாத சில அறிவிப்புகள் உள்ளன, ஆனால் அவற்றின் தாக்கம் பெரியதாக இருக்கலாம்.

சுற்றுலா, ஆயுர்வேதம், அரிய வகை மண் மற்றும் அதிவேக ரயில் தொடர்பான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மேலும் இது போன்ற பல அறிவிப்புகள் பட்ஜெட் உரையில் வெளியிடப்பட்டுள்ளன, அவை நீண்டகாலத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அத்தகைய சில அறிவிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

1. தங்கப் பத்திரங்கள் மீதான வரி விதிகள் மாற்றப்பட்டுள்ளன

இரண்டாம் நிலை சந்தையில் இருந்து வாங்கப்படும் சாவரின் கோல்ட் பாண்ட்

பட மூலாதாரம், AFP via Getty Images

முன்பு எப்படி இருந்தது? – சாவரின் தங்க பத்திரங்களை முதிர்வுக் காலம் வரை வைத்திருந்தால், அதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.

By admin