• Sat. Mar 22nd, 2025

24×7 Live News

Apdin News

மனிதனுக்கு முன்பே விண்வெளிக்குச் சென்ற ‘லைக்கா’ நாய் எவ்வாறு இறந்தது?

Byadmin

Mar 22, 2025


சோவியத் யூனியன், அமெரிக்கா, விண்வெளிப் பயணம், லைக்கா, நாசா

பட மூலாதாரம், Getty Images

சோவியத் ஒன்றியம் 1957-ஆம் ஆண்டு பூமியில் இருந்து முதல் உயிரினத்தை புவியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. இந்த முதல் ‘விண்வெளி நட்சத்திரம்’ மாஸ்கோவின் தெருக்களைச் சேர்ந்த லைக்கா எனும் பெண் நாய்.

ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் தனியாக விண்வெளிக்குச் சென்றது லைக்கா. இதற்கு முன்பு எந்த மனிதனும் செல்லாத இடத்திற்குச் சென்று, மனித விண்வெளிப் பயணம் தொடங்குவதற்கு வழி வகுத்தது.

அது பனிப் போர் உச்சத்தில் இருந்த காலம். நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் முதன்முதலில் சந்திரனில் கால் பதிப்பதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் விலங்குகளை விண்வெளிக்கு அனுப்பின.

அமெரிக்கர்கள் குரங்குகள் மற்றும் சிம்பன்சிகளை பரிசோதனை செய்த போது, ​​ரஷ்யர்கள் நாய்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தனர். ஏனென்றால் அவற்றுக்கு பயிற்சி அளிப்பது எளிது.

By admin