• Tue. Jan 21st, 2025

24×7 Live News

Apdin News

மனிதன் போலவே பிற உயிரினங்களிலும் பெண்ணுக்கு பரிசு வழங்கும் ஆண் – என்ன நடக்கிறது?

Byadmin

Jan 21, 2025


கிஃப்ட் கொடுக்கும் விலங்குகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாம் நினைப்பதை விட இயல்பாக  விலங்குகளுக்கு இடையே பரிசுப் பரிமாற்றம் மிகப் பொதுவாக நடக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாள் பரிசைப் பிரிக்கும்போது அதில் வண்ணமயமான காலுறைகளை நீங்கள் காணும்போது, ஒரு ஏமாற்றத்தை உணர்ந்தால், நீங்கள் ஒரு பெண் ஈயாக இல்லை என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்து கொள்ளுங்கள்.

ஒரு பெண் ஈ (scorpion fly) அதன் இணையிடம் இருந்து உமிழ்நீரைப் பரிசாக எதிர்பார்க்கலாம். ஒரு வேளை அதில் ஏமாற்றம் அடைந்தால், அந்தப் பெண் ஈ அதன் சாத்தியமான இணைகளிடம் இருந்து வரும் சின்னச்சின்ன அன்பளிப்புகளை பெற்றுக் கொள்கிறது.

நத்தைகள், மண்புழுக்கள் போன்ற பல்வேறு இனங்களில் உள்ள ஆண் விலங்குகள் தங்களது அன்பைத் தெரிவிக்க மற்றும் இனச்சேர்க்கையின் போது பெண்களுக்கு ஊட்டச்சத்து கொண்ட பரிசுகளை வழங்குகின்றன.

பறவைகளும் பரிசுகளை வழங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளன. ஆண் சாம்பல் பருந்து குருவி சிறிய உயிரினங்களைப் பிடித்து முட்கள் அல்லது கிளைகளில் சொருகுவதன் மூலம் தங்கள் துணையை ஈர்க்கின்றன. பின்னர் அதை பெண் குருவிகளுக்கு அன்பளிப்பாக வழங்குகின்றன.



By admin