0
கிளிநொச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்டபட்ட இயக்கச்சி பகுதியில் செம்மணி உட்பட வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதி கோருவதற்காக கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்குப்பகுதிகளில் செம்மணி உட்பட வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதி கோருவதற்காக கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.
இந்நிலையில் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் இக்கையெழுத்து சேகரிக்கும் செயற்பாட்டுக்கு இயக்கச்சி பிரதேசத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு கையொப்பங்களிட்டு வருகின்றனர்.