• Thu. Jan 8th, 2026

24×7 Live News

Apdin News

மனித கடத்தல் தொடர்பான 2026–2030 தேசிய மூலோபாய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

Byadmin

Jan 6, 2026


திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயம் (UNTOC) மற்றும் அதன் துணை வலுவாக்க பணிச்சட்டகமான மனித மனிதக் கடத்தலை; தடுத்தல், ஒழித்தல் மற்றும் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை எடுத்தல் (குறிப்பாக பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக இடம்பெறுகின்ற குற்றங்கள் தொடர்பாக) வலுவாக்கத்திற்கான பலமோர் பணிச்சட்டகத்தில் (Palermo Protocol)  இலங்கை கையொப்பமிட்டு ஏற்று அங்கீகரித்துள்ளது.

அதற்கமைய, மனித வியாபாரத்தைத் தடுப்பதில் முனைப்பாகப் பங்கெடுக்கின்ற நிறுவனங்கள் மற்றும் ஆர்வங்காட்டுகின்ற நிறுவனங்களை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக 2010 ஆண்டில் மனித வியாபாரத்திற்கு எதிரான தேசிய செயலணி நிறுவப்பட்டுள்ளது.

இச்செயலணி திட்டவட்டமான காலப்பகுதிக்கு தயாரிக்கப்பட்டுள்ள செயற்பாட்டுத் திட்டத்திற்கமைய செயலாற்றியுள்ளதுடன், 2021 – 2025 வரையான காலப்பகுதிக்கான இறுதி தேசிய மூலோபாயத் திட்டத்தின் காலம் 2025.12.31 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

அதனால், குறித்த செயற்பாட்டுத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வை நடாத்தி, ஏற்புடைய அனைத்துத் தரப்பினர்களின் உடன்பாடு மற்றும் புரிதலுடன், தடுத்தல், பாதுகாத்தல், வழக்குகளைத் தொடர்தல் (முறைப்பாடு செய்தல்) மற்றும் பங்களிப்புடன் செயலாற்றுதல் போன்ற நான்கு வகை அணுகுமுறைகளுடன் கூடிய 2026 – 2030 காலப்பகுதிக்கான தேசிய மூலோபாய செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த தேசிய மூலோபாயத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

By admin