தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.
மலையக மக்கள் எதிர்கொள்கின்ற கல்வி, வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள் குறித்தும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அந்த அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு விசேட கவனம் செலுத்தினார்.
மேலும், மலையகப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, தகுதியான தமிழ் மொழி மூல ஆசிரியர்களை விரைவாக ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான பி. திகம்பரம், வி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பலர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.





The post மனோ கணேசன் தலைமையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர் appeared first on Vanakkam London.