0
கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி, இங்கிலாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, மன்னர் மூன்றாம் சார்லஸை பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அத்துடன், டவுனிங் தெருவில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரையும் அவர் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
தொடர்புடைய செய்தி : கனடா புதிய பிரதமரின் முதல் சர்வதேச விஜயம் இங்கிலாந்திற்கு!
இக்கலந்துரையாடல்கள் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளன.
இதற்கு முன்னதாக மார்க் கார்னி, பிரான்ஸ்க்கு விஜயம் மேற்கொண்டு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுடன் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றார்.