• Mon. Mar 31st, 2025

24×7 Live News

Apdin News

மன்னாரைச் சேர்ந்த குடும்பஸ்தர் மாயம்!

Byadmin

Mar 28, 2025


மன்னார், பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியைச் சேர்ந்த முருகேசு சசிக்குமார் என்ற 51 வயது குடும்பஸ்தர், கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளளார் என்று அவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேற்படி குடும்பஸ்தர் கடந்த 23 ஆம் திகதி வவுனியா சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பாத நிலையில் அவர் காணாமல்போயுள்ளார் என்று அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நபர் தொடர்பாக தகவல் எதுவும் தெரிந்தவர்கள் 0743022280, 0758320499 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin