2
மன்னார் காற்றாலை அமைப்பு விவகாரம் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறி இருக்கும் சூழலில் அது பற்றி ஆராய்ந்து முடிவெடுப்பதற்காகச் சம்பந்தப்பட்ட தரப்புகள் நாளை புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துப் பேச இருக்கின்றன.
போராட்டம் நடத்தும் பொது அமைப்புகளின் ஐந்து பிரதிநிதிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிபர், பிரதேச செயலாளர் போன்றோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றுகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மன்னாருக்குப் பிரசாரத்துக்கு வந்த அநுரகுமார திஸாநாயக்க, மன்னாரில் அந்தப் பிரதேச மக்களின் அனுமதியும் இணக்கமும் இல்லாமல் இத்தகைய திட்டங்கள் முன்னெடுக்கப்பட மாட்டா என்று வாக்குறுதியளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.