மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (20) 18 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு இன்றைய தினம் ஆதரவு வழங்கும் வகையில் கொக்குபுடையான் கிராம மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய தினம் காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது.போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரம் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் முகமாக மக்கள் போராட்ட முன்னனியினரும் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
அதே நேரம் மன்னார் மக்களின் உரிமைக்காக சிங்கள,மற்றும் தமிழ் மக்களை ஒன்று திரட்டி இம்மாதம் 23,24 ஆம் திகதிகளில் கண்டி மாவட்டத்தில் இருந்து கிரிபத்கொட வரை ஒரு நடைபவணி ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற உள்ளதாகவும் மக்கள் போராட்ட முன்னனியினர் தெரிவித்துள்ளனர்.
The post மன்னார் மக்களின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் விதமாக கண்டியில் ஊர்வலம் appeared first on Vanakkam London.