• Fri. Dec 27th, 2024

24×7 Live News

Apdin News

மன்மோகன் சிங் காலமானார்: பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் – காங்கிரஸ் கூறியது என்ன?

Byadmin

Dec 27, 2024


இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92.

உடல்நலம் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் இன்று இரவு 10.30 மணியளவில் அறிவித்தது.

இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணத்தை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். வயது மூப்பு காரணமாக சிகிச்சையில் இருந்த அவர்  டிசம்பர் 26ஆம் தேதி சுயநினைவை இழந்தார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இரவு 8.06 மணி அளவில் மன்மோகன்சிங் கொண்டுவரப்பட்டார்.  எவ்வளவோ முயற்சி செய்த போதிலும், அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இரவு 9.51 மணியளவில் மன்மோகன் சிங் உயிரிழந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin