• Sun. Dec 29th, 2024

24×7 Live News

Apdin News

மன்மோகன் சிங் vs மோதி: இரு தலைவர்களின் உறவு எப்படி இருந்தது?

Byadmin

Dec 28, 2024


மன்மோகன் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்குப் பிறகு, அவரது பதவிக்காலங்கள் , அரசியல் மரபு, பொருளாதார நிபுணராக அவரது கண்ணோட்டம் ஆகியவற்றைக் குறித்து பேசப்பட்டது.

மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோதி, “பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கைகளில் வலுவான தடம் பதித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவரது செயல்பாடுகள் புத்திசாலித்தனமானவை. நமது பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை அவர் மேற்கொண்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அஞ்சலி செய்தியில், மன்மோகன் சிங் ஒரு பொருளாதார நிபுணர், அரசியல்வாதி என பிரதமர் மோதி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆனால், இதற்கு மற்றொரு பக்கம் உள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, ​​குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதி, மன்மோகன் சிங்கை பல விஷயங்களில் விமர்சித்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். அது பொருளாதாரக் கொள்கையாக இருந்தாலும் சரி, காங்கிரசின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஊழல்கள் என்று கூறப்பட்டதாக இருந்தாலும் சரி, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் கூறப்படும் தோல்வியாக இருந்தாலும் சரி.

By admin