• Sat. Jan 10th, 2026

24×7 Live News

Apdin News

மமதா பானர்ஜி ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையின்போது நேரில் வந்து கூறியது என்ன?

Byadmin

Jan 10, 2026


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பிரதீக் ஜெயினின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனையின் போது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆவணங்களுடன் வெளியேறுகிறார்.

மேற்கு வங்கத்தில் நேற்று அரங்கேறிய ஒரு பரபரப்பான நிகழ்வில், அரசியல் ஆலோசனை நிறுவனமான ஐ-பேக்கின் தலைவர் பிரதீக் ஜெயினின் கொல்கத்தா இல்லத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் முதலமைச்சர் மமதா பானர்ஜி அங்கு சென்றடைந்தார்.

அங்கு சென்ற அவர், தனது கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் ஹார்ட் டிஸ்க்குகள், ஆவணங்கள் மற்றும் முக்கியமான தரவுகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ய முயன்றதாக குற்றம் சாட்டினார்.

பிரதீக் ஜெயினைத் தனது கட்சியின் ஐடி பிரிவின் தலைவர் என்று குறிப்பிட்ட மமதா பானர்ஜி, அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸின் ஆவணங்கள் மற்றும் கட்சியின் சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்களின் விவரங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.

‘மேற்கு வங்கத்தில் மறைப்பதற்கு எதுவுமில்லை என்றால், ஒரு முதல்வர் ஏன் அதிகாரப்பூர்வ விசாரணை நடக்கும் இடத்திற்குச் சென்று கோப்புகளை எடுக்க வேண்டும்?’ என பாரதிய ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது.

By admin