• Sun. Feb 2nd, 2025

24×7 Live News

Apdin News

மருத்துவ உயர் கல்வியில் இருப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழ்நாட்டை எப்படி பாதிக்கும்?

Byadmin

Feb 2, 2025


மருத்துவ உயர் கல்வியில் இருப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீடு கூடாது: உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழ்நாட்டை எப்படி பாதிக்கும்

பட மூலாதாரம், Getty Images

மருத்துவ முதுகலை பட்டப்படிப்புகளில் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கதல்ல என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தமிழக மருத்துவ உயர்கல்விப் படிப்பு ஒதுக்கீடுகளை எப்படி பாதிக்கும்?

மருத்துவ மேற்படிப்புகளில் இருப்பிடத்தை (Domicile/residence based) அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீடு செல்லாது என ஜனவரி 29ஆம் தேதி இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ள சமத்துவத்திற்கு எதிரானது எனவும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

நீதிபதிகள் ஹ்ரிஷிகேஷ் ராய், ஷுதான்ஷு தூலியா, எஸ்.வி.என். பாட்டி அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

சண்டீகரில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒன்று இயங்கிவருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் உள்ள முதுநிலைப் படிப்புகளில் 64 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கென வழங்கப்பட்டன.

By admin