• Sat. Sep 20th, 2025

24×7 Live News

Apdin News

மருத்துவ மாணவர்களுக்கு ரேபிஸ் தடுப்பு சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்க தேசிய மருத்துவ ஆணையம் வலியுறுத்தல் | National Medical Commission urges medical students to be trained in rabies prevention and treatment

Byadmin

Sep 20, 2025


சென்னை: ரேபிஸ் நோய் தடுப்பு சிகிச்​சைகள் குறித்து அனைத்து மருத்​து​வர்​கள், மருத்​துவ மாணவர்​களுக்​குப் பயிற்சி அளிக்க வேண்​டும் என்று நாடு முழு​வதும் உள்ள மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்கு தேசிய மருத்​துவ ஆணை​யம் அறிவுறுத்தியுள்​ளது.

இது தொடர்​பாக தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் (என்​எம்​சி) செயலர் மருத்​து​வர் ராகவ் லங்​கர் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாடு முழு​வதும் நாய்க்​கடி மூலம் பரவும் ரேபிஸ் நோய் தொற்று பெரும் அச்​சுறுத்​தலாக மாறி​யுள்​ளது.

அத்​தகைய பாதிப்பு ஏற்​பட்​டால் உயி​ரிழப்பு நிச்​ச​யம் என்​றாலும், உரிய சிகிச்​சைகளின் மூலம் உயி​ரிழப்பு ஏற்​ப​டா​மல் 100 சதவீதம் தடுக்க முடி​யும். 2030-ம் ஆண்​டுக்​குள் ரேபிஸ் தொற்றை முழு​மை​யாக ஒழிப்​ப​தற்​கான தேசிய திட்​டத்தை மத்​திய சுகா​தார அமைச்​சக​மும், கால்​நடை அமைச்​சக​மும் ஒருங்​கிணைந்து செயல்​படுத்​தி​யுள்​ளன. இதை சாத்​தி​ய​மாக்​கு​வ​தில் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களின் பங்​களிப்பு முக்​கிய​மானது.

அதன்​படி, விலங்கு கடிக்கு அளிக்​கப்பட வேண்​டிய சிகிச்​சைகள் குறித்து மருத்​து​வர்​கள், மருத்​துவ மாணவர்​களுக்கு குறிப்​பிட்ட கால இடைவெளி​யில் முறை​யான பயிற்​சிகளை வழங்க வேண்​டும். தேசிய வழி​காட்​டு​தல்​களின்​படி நோய் தடுப்பு மற்​றும் மருத்​து​வக் கண்​காணிப்பு நடவடிக்​கை​களில் எப்​படி செயல்பட வேண்​டும் என்​பது குறித்​து விளக்க வேண்​டும்.

போதிய எண்​ணிக்​கை​யில் ரேபிஸ் தடுப்​பூசிகள், ரேபிஸ் எதிர்ப்​பாற்​றல் தடுப்​பூசிகள் இருப்​பதை அவசி​யம் உறுதி செய்ய வேண்​டும். மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்கு விலங்கு கடி பாதிப்​பு​களுக்​காக சிகிச்​சைக்கு வரு​வோரின் விவரங்​கள் அடங்​கிய பதிவேட்டை பராமரிக்க வேண்​டும். அந்த தரவு​களை ஒருங்​கிணைந்த சுகா​தார தகவல் தளத்​தில் (ஐஹெச்​ஐபி) கட்​டா​யம் பதிவேற்​றம் செய்ய வேண்​டும்.

மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​கள் மற்​றும் அதை சார்ந்த மருத்​து​வ​மனை​களில் செயல்​படும் புற நோயாளி​கள் பிரிவு, பிற முக்​கிய இடங்​களில் ரேபிஸ் தடுப்பு விழிப்​புணர்வு பிர​சார நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



By admin