• Wed. Dec 10th, 2025

24×7 Live News

Apdin News

மற்றுமொரு சிக்கலில் Louvre அருங்காட்சியகம் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் சேதம்!

Byadmin

Dec 10, 2025


பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள Louvre அருங்காட்சியகத்தில் நீர்க் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் சேதமடைந்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

Louvre அருங்காட்சியகத்தில் 102 மில்லியன் டொலருக்கு மேல் மதிப்புள்ள நகைகள் களவு போன சில வாரங்களில் இந்தப் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

300இல் இருந்து 400 வேலைப்பாடுகள் சேதமுற்றதாகவும் அவற்றில் பெரும்பாலானவை புத்தகங்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், பெரும் பொக்கிஷமாகக் கருதப்படும் புத்தகங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. சேதமடைந்த புத்தகங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு வருகிறது.

நீரில் நனைந்த புத்தகங்கள் உலர்த்தப்பட்டு, சரிசெய்யப்பட்டு மீண்டும் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே சுற்றுப்பயணிகள் மிக அதிகமாகச் சென்று திரும்பும் அருங்காட்சியகத்தில் இந்த ஆண்டு மூன்றாவதுமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் கொள்ளைச் சம்பவம் நடந்தது. கடந்த நவம்பரில் கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சினையால் அருங்காட்சியகத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதி மூடப்பட்டது. இப்போது நீர்க் கசிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin