• Fri. Feb 20th, 2026

24×7 Live News

Apdin News

மலேசியா வாசுதேவன் பாடிய ‘மயங்க வைக்கும்’ 10 பாடல்கள்

Byadmin

Feb 20, 2026


மலேசியா வாசுதேவன் பாடிய மயக்க வைக்கும் 10 பாடல்கள்

பட மூலாதாரம், prashanthini_vasudevan/IG

கேரளாவை பூர்வீமாகக் கொண்ட மலேசியா வாசுதேவனின் பெற்றோர் வேலைக்காக மலேசியா சென்றார்கள். அங்குள்ள சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ராஜகிரி எஸ்டேட்டில் ஜூன் 15, 1944 அன்று எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர் சாத்து ஆறுமுகம் நாயர். இந்தக் குழந்தைதான் பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் மலேசியா வாசுதேவன் என்ற பெயரில் கொடிகட்டிப் பறந்தது.

மலேசியா தமிழ் பள்ளியில் படித்து, தமிழர்களுடன் நெருக்கமாக இருந்த மலேசியா வாசுதேவன் ஆரம்பத்தில் அங்குள்ள நாடகக் குழுவொன்றில் நடிகராகவும் பாடகராகவும் தனது கலைப் பயணத்தை தொடங்கினார்.

தான் நடித்த “ரத்தப் பேய்” எனும் நாடகத்தைப் படமாக எடுக்க விரும்பிய நாடகக் குழுவினரோடு சென்னை வந்து சேர்ந்தார். சென்னையில் “ரத்தப் பேய்” உருவானது. அந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். அவரின் உதவியாளராக அப்போது பணியாற்றியவர் இளையராஜா. அன்று முதல் இளையராஜா, மலேசியா வாசுதேவன் நட்பு உருவானது.

மலேசியா வாசுதேவன் என்ற பெயர் வந்தது எப்படி?

ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா நடித்த “டெல்லி டு மதராஸ்” எனும் படத்தில் வரும் “பாலு விக்கிற பத்தும்மா… உன் பாலு ரொம்ப சுத்தம்மா…” என்ற நகைச்சுவைப் பாடலை மலேசியா வாசுதேவன் முதலில் பாடினர். அந்த பாடலுக்கு வி.குமார் இசையமைத்திருந்தார்.

பின்னர் வாசுதேவன் இளையராஜாவின் “பாவலர் சகோதரர்கள்” குழுவில் இணைந்து வாசுதேவன் பெயரில் கச்சேரிகளில் பாடினார். ஒரு நாடகத்தில் அவரது குரலைக் கேட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் “பாரத விலாஸ்” படத்தில் ‘இந்திய நாடு என் வீடு’ என்ற பிரபலமான பாடலில் வரும் “சுனோ சுனோ பாய்… சுனோ சுனோ மே பஞ்சாப் வாலா கீத்து சுனோ…” என்ற வரிகளைப் பாட வைத்தார். பின்னர், அவர் இசையில் “தலைப் பிரசவம்” படத்தில் ஒரு பாடலை அவர் பாடினார்.

By admin