• Fri. Nov 29th, 2024

24×7 Live News

Apdin News

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

Byadmin

Nov 28, 2024


மழைக்காலம் வந்துவிட்டது. இனி தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு அதிகம். மழைக்குப் பின் தெருக்களில் நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மழைக்காலங்களில் மாலை நேரங்களில் வீட்டுக்குள் கொசுக்கள் அதிகமாக வரும், இது டெங்கு போன்ற நோய்கள் பரவுவதற்கான முக்கிய காரணமாக இருக்கக்கூடும்.

அதனால், வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாலை நேரத்தில் வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மூடப்பட வேண்டும். காலை, மதியம் நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம்.

இந்நாட்களில், அத்தியாவசியம் என்றால் மட்டுமே வெளியே செல்லுங்கள். சிறுவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அவர்கள் முழுக் கை ஆடைகள் அணிந்து இருப்பதை உறுதிசெய்யுங்கள்.

டெங்கு காய்ச்சலுக்கு நிலையான மருந்து இல்லை; இதன் சிகிச்சை, அதன் அறிகுறிகளை கட்டுப்படுத்துவதில் மட்டுமே உள்ளது. டெங்குவால் ஏற்படும் கண் வலி, தசை வலி, மூட்டு வலி, வாந்தி, சொறி, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளை நிவர்த்திக்கத் தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

By admin