3
மாகாண சபைத் தேர்தல் இந்த வருடம் நடைபெறாது என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“அரசு தொடர்ந்து தேர்தல்களை நடத்திக்கொண்டிருக்க முடியாது. அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் பிரதான தேர்தல்கள் முடிவுக்கு வரும்.
மாகாண சபைத் தேர்தலை மாத்திரம் நடத்த வேண்டும். சட்டங்களை மாற்ற வேண்டியுள்ளதாலும், நாட்டின் அபிவிருத்திக்குப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாலும் மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் நடத்த முடியாது.” – என்றார்.