• Sun. Apr 27th, 2025

24×7 Live News

Apdin News

மாங்காய் மோர்க் குழம்பு – Vanakkam London

Byadmin

Apr 26, 2025


தேவையான பொருள்கள்

மோர் – 2 டம்ளர்

மாங்காய் துண்டுகள் அரை கிண்ணம்

கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி

சீரகம்- 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய்- 1

இஞ்சி துருவல் – அரை தேக்கரண்டி

தேங்காய்த் துருவல் – 4 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க: கடுகு, தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை.

செய்முறை

மாங்காய்த் துண்டுகளை சிறிது நீர், மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெந்நீரில் கடலைப்பருப்பு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், தேங்காய்த் துருவல் ஊறவைத்து, அரைத்து, மோரில் விட்டு கலக்கவும். இதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து சூடுபடுத்தி, ஒரு கொதி வந்ததும் வெந்த மாங்காய்த் துண்டுகளையும் உப்பையும் சேர்த்து இறக்கி வைக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். சுவையான மாங்காய் மோர் குழம்பு ரெடி

By admin