• Tue. Apr 15th, 2025

24×7 Live News

Apdin News

மாசகோ: அமேசானில் தானியங்கி கேமரா மூலம் பழங்குடி மக்களை கண்காணித்த ஆய்வாளர்களுக்கு காத்திருந்த ஆச்சர்யம் என்ன?

Byadmin

Apr 13, 2025


2024 இல் தானியங்கி கேமராவால்  காட்டில் எடுக்கப்பட்ட படம்.

பட மூலாதாரம், CGIIRC/Funai

படக்குறிப்பு, 2024 இல் தானியங்கி கேமராவால் காட்டில் எடுக்கப்பட்ட படம்

பழங்குடி மக்களிடம் பேசாமலும், அவர்களை நேரில் பார்க்காமலும் அவர்களை பற்றி அறிந்துக்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் விரும்புகிறார்கள்.

ஏனெனில், அமேசானில் இருக்கும் அந்த பழங்குடியின மக்களைத் தொடர்புகொள்வது சாத்தியமல்ல.

பிரேசிலின் கிழக்குப் பகுதியில் உள்ள ரொண்டோனியா மாகாணத்தில் பொலிவியா எல்லைக்கு அருகே வாழும் ஒரு பழங்குடி குழுவின் படத்தைப் பெறுவதற்காக, தானியங்கி முறையில் செயல்படும் கேமராக்களை நிபுணர்கள் பயன்படுத்தினர்.

அந்த பழங்குடி இன மக்கள் மாசகோ என்று அழைக்கப்படுகிறார்கள்.

By admin