• Sun. Dec 29th, 2024

24×7 Live News

Apdin News

“மாசற்ற மனது, தூய அன்புக்கு சொந்தக்காரர் விஜயகாந்த்” – முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி | M.K. Stalin pays tribute to Vijayakanth on his first death anniversary

Byadmin

Dec 28, 2024


சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு சமூகவலைதளத்தின் வாயிலாக புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மாசற்ற மனதுக்கும், தூய அன்புக்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் – கேப்டன் விஜயகாந்தை நினைவுகூர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிச.28-ம் தேதி தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதிச் சடங்கில் அரசு மரியாதையும் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் கட்சித் தலைமையகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, அங்கு நாள்தோறும் பூஜையும், அன்னதானமும் செய்யப்படுகிறது. இந்நிலையில், விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, அரசியல் தலைவர்கள் அவரின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாக இன்று காலை சென்னை கோயம்பேட்டில் அவரது நினைவிடத்துக்கு தேமுதிகவினர் பேரணியாகச் சென்று அஞ்சலி செலுத்தினர்.



By admin