• Tue. Apr 8th, 2025

24×7 Live News

Apdin News

மாணவர்கள் பொதுவெளியில் வெளிப்படையாக பேச வேண்டும் – அண்ணாமலை அறிவுறுத்தல் | சொல் தமிழா சொல் – 2025 | students should speak openly in public annamalai said in sol tamizha sol 2025 srm event

Byadmin

Apr 8, 2025


பொத்தேரி: எஸ்​ஆர்​எம் தமிழ் பேரா​யம் நடத்​திய சொல் தமிழா சொல் 2025 பேச்​சுப்​போட்​டி​யில் வெற்​றி​யாளர்​களுக்கு பரிசு வழங்​கும் விழா​வில் பேசிய பாஜக மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை, சமூக வலை​தளங்​களில் பேசுவதை​விட மாணவர்​கள் பொது​வெளி​யில் தங்​கள் கருத்​துகளை வெளிப்​படை​யாக பேச வேண்​டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகம் முழு​வதும் உள்ள கல்​லூரி மற்​றும் பல்​கலைக்​கழகங்​களில் பேச்​சுத் திறன்​மிக்க மாணவர்​களை அடை​யாளம் கண்​டு, அவர்​களை ஊக்​குவிக்​கும் உயரிய நோக்​குடன் அனைத்து மாவட்​டங்​களும் 9 மண்​டலங்​களாகப் பிரிக்​கப்​பட்​டு, பேச்​சுப் போட்​டிகள் நடை​பெற்​றன. சென்​னை, வேலூர், கடலூர், திருச்​சி, தஞ்​சாவூர், மதுரை, நெல்​லை, கோவை, சேலம் ஆகிய 9 மண்டல அளவி​லான போட்​டிகள் நடை​பெற்று முடிந்​தது.

2,000-க்​கும் மேற்​பட்ட மாணவர்​களிடையே பல்​வேறு தலைப்​பு​களின் அடிப்​படை​யில் பேச்​சுப் போட்​டிகள் நடத்​தப்​பட்​டன. மாநில அளவி​லான இறு​திப்​போட்​டிக்​கான இரண்டு சுற்​றுகள் ஏப். 6-ம் தேதி​யும், இறு​திச்​சுற்று மற்​றும் பரிசளிப்பு விழா நேற்​றும் நடை​பெற்​றன. இறு​திப்​போட்​டி​யில் நடு​வ​ராக பிரபல பட்​டிமன்ற பேச்​சாளர் ஞானசம்​பந்​தன், புதிய தலை​முறை தொலைக்​காட்​சி​யின் அரசி​யல் பிரிவு ஆசிரியர் கார்த்​தி​கேயன் கலந்து கொண்டு இறுதி போட்​டி​யில் முதன்மை பேச்​சாளர்​களை தேர்ந்​தெடுத்​தனர்.

இறு​திச்​சுற்​றில் ‘மருத்​து​வம், பொறி​யியல் தமிழில் சாத்​தி​யம் – சாத்​தி​யமில்​லை’,‘ஒரே கட்சி மத்​திய, மாநிலத்​தில் ஆட்சி அமைக்க வேண்​டும் சாத்​தி​யம் – சாத்​தி​யமில்​லை, ஒரே நாடு, ஒரே தேர்​தல் சாத்​தி​யமே – சாத்​தி​யமில்​லை, தமிழகத்தை சேர்ந்த ஒரு​வர் பிரதம​ராக முடி​யு​மா? சாத்​தி​யம் – சாத்​தி​யமில்லை ஆகிய தலைப்​பு​களில் 8 பேர் பேசினர்.

முதல் பரிசை லாவண்யா (அரசு சட்ட கல்​லூரி நெல்​லை), இரண்​டாவது பரிசை ராஜவேல் (சதக்​கத்​துல்​லா அப்பா கல்​லூரி நெல்​லை), மூன்​றாவது பரிசை ஆதிரா (மனோன்​மணி​யம் சுந்​தர​னார் பல்​கலைக்​கழகம் நெல்​லை) பெற்​றனர். மாநில அளவில் வெற்றி பெற்​றவருக்கு முதல் பரி​சாக ரூ.5 லட்​சம், 2-ம் பரி​சாக ரூ.3 லட்​சம், 3-ம் பரி​சாக ரூ.2 லட்​சம் வழங்​கப்​பட்​டது. மொத்​தம் ரூ.40 லட்​சம் மதிப்​பில் பரிசுத் தொகை வழங்​கப்​பட்​டது. இதனைத்​த​விர 74 பேருக்கு ஆறு​தல் பரிசு வழங்​கப்​பட்​டது.

எஸ்​.ஆர்​.எம். பல்​கலைக்​கழக வேந்​தர் டாக்​டர் தா.இ​ரா.​பாரிவேந்​தர் தலை​மை​யில் நடை​பெற்ற பரிசளிப்பு விழா​வில், தமிழ்ப் பேரா​யத்​தின் தலை​வர் முனை​வர் கரு.​நாக​ராசன் அறி​முக உரை​யாற்​றினார். பேராசிரியரும், பட்​டிமன்​றப் பேச்​சாள​ரு​மான கு.​ஞானசம்​பந்​தன் வாழ்த்​துரை வழங்​கி​னார். பரிசளிப்பு விழா​வில் சிறப்பு விருந்​தினர்​களாக தமிழக பாஜக தலை​வர் அண்​ணா​மலை, நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் பங்கேற்று உரை​யாற்​றினர்.

விழா​வில், எஸ்​ஆர்​எம் பல்​கலைக்​கழக நிறுவன டாக்​டர் பாரிவேந்​தர் பேசும்​போது, “தமிழகத்​தில் ஏராள​மான பேச்​சாளர்​கள் வரவேண்​டும் என்ற நோக்​கில் சொல் தமிழா சொல் தொடர்ந்து செயல்​படும். தமிழகம் பேச்​சால் ஆட்​சி​யைப் பிடித்​தது. பேச்​சாற்​றல் கொண்ட அண்​ணா​மலை​யும், சீமானும் இணைய வேண்​டும். தமிழகத்​தில் ஊழலற்ற நிலையை உரு​வாக்க இரு​வரும் பாடுபட வேண்​டும். கோடானு கோடி மக்​களின் வேண்​டு​கோள் இது​தான்” என்​றார்.

நிகழ்ச்​சி​யில் அண்​ணா​மலை பேசி​ய​தாவது: எஸ்​ஆர்​எம் பல்​கலைக்​கழகம் அரங்​கம் நிரம்பி இருப்​பதை பார்க்​கும்​ போது மகிழ்ச்சி அளிக்​கிறது. தமிழ்​நாட்டை சேர்ந்த 2,000-க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் தங்​களு​டைய பேச்சு மக்​களிடம் செல்ல வேண்​டும் என மேடை ஏறி​யுள்​ளனர். அதில் 74 பேர் பரிசு பெற்​றுள்​ளனர். இது சாதா​ரண​மான செயல் அல்ல. அடுத்த ஆண்டு 20 ஆயிரம் பேர் கலந்து கொண்​டால்​தான் மக்​கள் பிரச்​சினைக்கு குரல் கொடுக்க முடி​யும். பாரிவேந்​தர் 86 அகவை​யில் இங்கு வந்து அமர்ந்​துள்​ளார். அனைத்து துறை​களி​லும் பாரிவேந்​தர் வெற்றி பெற்​றுள்​ளார்.

ஐந்து ஆண்​டு​களில் ரூ.400 கோடியை தன்​னுடைய தொகுதி மக்​களுக்​காக, செலவு செய்​துள்​ளார். இங்கு 2,000 பேர்​களில் 74 பேர் பரிசு வாங்​கி​னாலும் வாங்​காமல் இருந்​தா​லும் பரிசுகள் முக்​கியமில்​லை. அண்​ணன் சீமானை ஒரு அரசி​யல் கட்​சி​யின் ஒருங்​கிணைப்​பாளர் என்று சொல்​வதை விட ஒரு போர் தலை​வ​னாகத்​தான் நான் பார்க்​கிறேன். தன்​னுடைய கொள்​கைக்கு எந்த நிலை​யாக இருந்​தா​லும் போராடு​வேன் என நிற்​பவர் சீமான். எனக்​கும் சீமானுக்​கும் வித்​தி​யாசம் இல்​லை.

நான் தேசி​யத்​தில் தமிழை பார்க்​கிறேன். அவர் தமிழில் தேசி​யத்தை பார்க்​கிறார். தேசி​யக் கட்​சிகள் தேசிய பிரச்​சினையை முதன்​மை​யாக​வும் மாநில பிரச்​சினையை முக்​கிய​மாக​வும் பார்க்க வேண்​டும். அதே​போல், மாநில கட்​சிகள் மாநிலத்​தில் உள்ள பிரச்​சினை​களை முதன்​மை​யாக​வும் தேசி​யத்​தில் உள்ள பிரச்​சினையை முக்​கிய​மாக​வும் பார்க்க வேண்​டும். தொடர்ந்து ஒரு போர்க்​களத்​தில் என்​றும் இருக்​கக்​கூடிய தளப​தி​யாக சீமான் இருக்​கிறார்.

எடுத்​துக்​கொண்ட கொள்​கை​யில் நிலையாக நிலைத்து நிற்​கிறார். கல்​லூரி​களில் மாணவர்​களுக்கு அரசி​யல் என்​பது இல்​லை. மேடைகளில் பேசுவதை விட சமூக வலை​தளங்​களில் ஒரு கருத்தை பதி​விட்டு ஓடி ஒளிந்து விடு​கின்​றனர். சமூக வலை​தளங்​களில் பேசுவதை விட பொது​வெளி​யில் தங்​கள் கருத்​துகளை வெளிப்​படை​யாக பேச வேண்​டும்.

இளைஞர்​கள் தைரிய​மாக அரசி​யல் பேச வேண்​டும். 6, 7-ம் வகுப்​பில் படிக்​கும்​போது நான் சரி​யாக பேச மாட்​டேன், எனக்கு திக்​கு​வாய், பேருந்தில் டிக்​கெட் எடுப்பதற்குக்கூட பயப்​படுவேன். தமிழகம் வந்த பிரதமரை வரவேற்க வேண்​டியது முதல்வரின் கடமை ஆனால் அவர் செல்​ல​வில்​லை. இவ்​வாறு அவர் பேசி​னார். இந்​தப் போட்​டி​யின் பிரிண்ட்​ மீடி​யா பார்ட்​ன​ராக இந்​து தமிழ்​ திசை நாளிதழ், மீடி​யா ​பார்​ட்​ன​ராக புதிய தலைமுறை, வேந்​தர்​, புதுயுகம்​ தொலைக்​காட்​சி சேனல்​கள்​ இருந்​தன.

விழாவில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.

தலைவர்களை தேர்வு செய்வதில் தீவிரமாக இருக்க வேண்டும்: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து

நாம் தமிழ் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: எஸ்​ஆர்​எம் பல்​கலைக்​கழகத்​தின் நிறு​வனர் பாரிவேந்​தர், தமிழ் வளர்ச்​சிக்​காக தமிழ்ப் பேரா​யம் என்ற அமைப்பை தொடங்​கி, அதில் சொல் தமிழா சொல் என்ற தலைப்​பில் நாடெங்​கிலும் ஆற்​றல் மிக்க இளைய தலை​முறை பிள்​ளை​களை கொண்டு வந்து அவர்​களுக்கு சிறப்பு செய்​யும் பாரிவேந்​தருக்கு நன்​றி.

பாரியைப் பற்றி படித்​துள்​ளோம். ஆனால் பார்த்​த​தில்​லை. ஆனால், தற்​போது பார்க்​கிறோம். படிக்க வசதி இல்​லாத பல்​வேறு நபர்​களை இந்த பல்​கலைக்கழகத்​தில் பாரிவேந்​தர் படிக்க வைக்​கிறார். தாய்​மொழி வீழ்ச்சி அடைய கூடாது என சொல் தமிழா சொல் என்ற போட்​டியை தொடங்கி மாணவர்​களின் திறனை வெளிக்​கொண்டு வந்​துள்​ளார். பேச்சு என்​றால் இங்கு வெற்றி மட்​டுமே. பேச்சு என்​பது எண்​ணத்தை வெளிப்​படுத்​தும் கண்​ணாடி​யாகும்.

இங்கு பேசிப் பேசி காலத்தை ஓட்​டிய​வர்​கள் உண்​டு, சென்​றவர்​களும் உண்​டு. சொற்​களால் எவ்​வளவோ மாறு​தலை இந்த சமூகம் பார்த்​துள்​ளது. வார்த்​தைகளை வாயி​லிருந்து பேசி​னால் செவி வரை தான் செல்​லும். இதயத்​திலிருந்து சொற்​கள் செல்​வது மனதள​வில் பதி​யும். தமிழ் உலக மொழிகளின் தாய். அனைத்து மொழிகளும் மனிதர்​களால் பேசப்​பட்​டது. உலகின் எம்​மொழி​யும் துணை என தனித்து இயங்க கூடிய மொழி செம்​மொழி.

மருத்​து​வம் மற்​றும் பொறி​யியலை தமிழில் படிக்க முடி​யுமா என கேள்வி எழுப்​பு​கின்​றனர். இனி வரும் தலை​முறை​யினர் வாக்​காளர்​களாக மட்​டும் இருக்​காமல் அரசி​யல் கற்று கொள்​ளுங்​கள். அரசி​யல் தலை​வர்​களை தேர்வு செய்​வ​தில் தீவிரமாக யோசனை செய்ய வேண்​டும். பேச்சு என்​பது வலிமை மிக்க ஆயுதம். அந்தப் பணியை தமிழ்ப் பேரா​யம் செய்கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார்.



By admin