• Wed. Nov 19th, 2025

24×7 Live News

Apdin News

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!

Byadmin

Nov 19, 2025


மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரட்டுவை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (18) உத்தரவிட்டுள்ளது.

14 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரும் அதனை மூடிமறைக்க முயற்சித்த அதிபரும் மொரட்டுவை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (17) மாலை கைதுசெய்யப்பட்டனர்.

பதுரெலிய மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அதிபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் ஆசிரியர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By admin