• Fri. Mar 20th, 2026

24×7 Live News

Apdin News

‘மாணவி மீது காலணியால் தாக்குதல்’ – திருச்சி கல்லூரியில் ராகிங் நடந்ததா?

Byadmin

Mar 20, 2026


'மாணவி மீது காலணியால் தாக்குதல்' - திருச்சி கல்லூரியில் ராகிங் நடந்ததா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை சக மாணவர் ஒருவர் காலணியால் தாக்கும் காணொளி ஒன்று வியாழக்கிழமையன்று (19 ஆம் தேதி) இணையத்தில் வேகமாக பரவியது.

ராகிங் கொடுமை காரணமாக மாணவி தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், ‘இது ராகிங் அல்ல’ என மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

மாணவிக்கு இதயநோய் பாதிப்பு இருப்பதால் இந்த தாக்குதலால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, அவரது தந்தை பிபிசி தமிழிடம் கூறினார்.

தனது அக்காவை தாக்கிய இரண்டாம் ஆண்டு மாணவர் கிருபாகரன் தொடர்ந்து உருவக்கேலி செய்து வந்ததாகக் கூறுகிறார் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர். கிருபாகரனை காவல்துறை கைது செய்துள்ளது.

கல்லூரியில் என்ன நடந்தது?

பிபிசி தமிழிடம் பேசிய மாணவியின் சகோதரர், “கடந்த 9-ஆம் தேதியன்று கல்லூரி படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்த என் அக்காவை, கிருபாகரன் இடித்துவிட்டார். இதனால் கோபப்பட்டு என் அக்கா அவரிடம் வாக்குவாதம் செய்தார்” என்கிறார்

By admin