• Tue. Oct 28th, 2025

24×7 Live News

Apdin News

மாதவன் நடிக்கும் ‘ஜி.டி.என்’ ( ஜி.டி.நாயுடு) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Byadmin

Oct 27, 2025


பான் இந்திய நட்சத்திர நடிகரான மாதவன் கதையின் நாயகனாக – இந்தியாவின் எடிசன் என போற்றப்படும் விஞ்ஞானியாக-  நடிக்கும் ‘ஜி.டி.என்’ ( ஜி. டி. நாயுடு)எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம குமார் இயக்கத்தில் உருவாகி வரும்  ‘ஜி டி என்’ (ஜி. டி. நாயுடு) படத்தில் ஆர். மாதவன், சத்யராஜ், ஜெயராம், தம்பி ராமையா, வினய் ராய், பிரியாமணி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

தமிழகத்தை சார்ந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வர்கீஸ் மூலன்- விஜய் மூலன் -சரிதா மாதவன் -ஆர். மாதவன்- ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும், இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் காணொளியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ‘கொலை வாளை எடுடா..’ எனத் தொடங்கும் கவிதையை  பின்னணியில் ஒலிக்க விட்டு, கதையின் நாயகனான மாதவன்-  ஜி டி நாயுடுவின் தோற்றத்தில் தோன்றுவது.. ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிக அளவில் ஏற்படுத்தி இருக்கிறது.

The post மாதவன் நடிக்கும் ‘ஜி.டி.என்’ ( ஜி.டி.நாயுடு) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Vanakkam London.

By admin