• Tue. Nov 4th, 2025

24×7 Live News

Apdin News

மாதவிடாய் பற்றி மகள்களிடம் அப்பாக்களும் பேசுவது அவசியம் – ஏன் தெரியுமா?

Byadmin

Nov 4, 2025


அப்பா, மாதவிடாய், Pads for Dads, ஆண்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

தற்போது பதினாறு வயதாகும் ஹெலனுக்கு முதல் மாதவிடாய் ஏற்பட்ட போது, அவருடைய தந்தை தான் அவருக்கு உதவினார். அப்போது, அவர் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.

இளம் வயதினருடன் மாதவிடாய் பற்றிப் பேசுவது சங்கடமாக இருக்கலாம். அதிலும் அதை அனுபவிக்காதவர்கள் அதைப் பற்றி பேசும் போது சங்கடமாக இருக்கலாம். இருப்பினும், மாதவிடாய் பற்றி வெளிப்படையாகப் பேசிய தனது அப்பா, இது வழக்கமாக எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சொன்னது அந்த சமயத்தை எதிர்கொள்ள மிகவும் உதவியாக இருந்தது என்று ஹெலன் கூறுகிறார்.

“அந்த உணர்வு எப்படியிருக்கும் என்று அப்பாக்களால் சொல்ல முடியாது என்பது உண்மை என்றாலும், அது உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் சொல்ல முடியும், அதைப் பற்றி பேசவும், ஆலோசனை வழங்கவும் முடியும்” என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும் மாதவிடாய் பற்றிப் பேசுவது பலருக்கும் சங்கடம் அளிக்கிறது என்பதால், பெண் குழந்தைகளிடம் மாதவிடாய் தொடர்பான விஷயத்தை கையாள்வது பெரும்பாலும் அம்மாக்களாகவே இருக்கின்றனர்.

அப்பா, மாதவிடாய், Pads for Dads, ஆண்கள்

பட மூலாதாரம், Getty Images

மாதவிடாய் பற்றி வெளிப்படையாக பேசக்கூடாது என்று நினைப்பதை கேள்வி எழுப்பும் அப்பாக்களில், ஹெலனின் தந்தை ஜான் ஆடம்ஸ்-உம் ஒருவர்.



By admin