• Sat. May 10th, 2025

24×7 Live News

Apdin News

மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் மே 11,12 தேதிகளில் விடுப்பு எடுக்க தடை | may 11th and 12th city bus drivers and conductors banned for taking leave

Byadmin

May 10, 2025


சென்னை: வரும் 11,12 தேதிகளில் மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: வரும் 11, 12 தேதிகளில் முகூர்த்தநாள் மற்றும் பவுர்ணமி ஆகியன வருவதால் மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விடுப்பு பெற்றிருந்தவர்கள் கூட மண்டல மேலாளர் அளவில் விடுப்பு எடுக்க மீண்டும் அனுமதி பெற வேண்டும் எனவும், பொதுமக்கள் நலன் கருதி அனைவரும் பணிக்கு வந்து ஒத்துழைப்பு வழங்கும்படி நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



By admin