• Fri. Jun 19th, 2026

24×7 Live News

Apdin News

மாநில அரசு கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனால் என்னவாகும்? 5 கேள்வி-பதில்கள்

Byadmin

Jun 19, 2026


தமிழ்நாடு, மாநில அரசு கடன், நிதி நிலைமை

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தமிழ்நாடு அரசு மாநிலத்தின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் மாநில அரசின் கடன் தொடர்பான புள்ளிவிவரங்களும் கொடுக்கப்பட்டிருந்தன.

வெள்ளை அறிக்கையை வெளியிட்டு பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் முந்தைய திமுக அரசின் செயல்பாடுகள் மீது விமர்சனங்களை வைத்திருந்தார்.

“மொத்த நிலுவை கடன் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 லட்சம் கோடி ரூபாய் அளவில் உள்ளது. உண்மையான கடன் அளவு 13.18 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது (இவை அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகளையும் உள்ளடக்கியது).” என்று தனது உரையில் தெரிவித்தார்.

இதற்கு எதிர்வினையாற்றிய முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக அரசு மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை மறுத்ததோடு மாநிலத்தின் கடன் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு உள்ளே இருப்பதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வுகள் மாநில அரசு கடன் பெறுவது தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளன, மாநில அரசு எங்கெல்லாம் கடன் பெற முடியும், அதனை எவ்வாறு திருப்பிச் செலுத்த வேண்டும் என்பன போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளன.

By admin