• Wed. Nov 6th, 2024

24×7 Live News

Apdin News

மாயன் நாகரிகம்: மெக்சிகோ காட்டில் கிடைத்த புதிய நகரம் மாயன்கள் பற்றிக் கூறுவது என்ன?

Byadmin

Nov 3, 2024


மெக்ஸிகோ காட்டில் புதைந்த மாயன் நகரம் : ஆராய்ச்சியாளர்  தற்செயலாக கண்டுபிடித்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

மெக்சிகோவில் காடுகளுக்கு அடியில் புதைந்திருந்த மிகப்பெரிய மாயன் நகரம் ஒன்று, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் ஆய்வாளர்கள் மெக்சிகோவின் தென்கிழக்கு மாநிலமான காம்பேச்சியில் பிரமிடுகள், விளையாட்டு மைதானங்கள், மாகாணங்களை இணைக்கும் பாதைகள் மற்றும் சுற்று மாளிகை அரங்கத்தைக் (ஆம்பிதியேட்டர்) கண்டறிந்துள்ளனர்.

அப்பகுதியில் புதைந்துபோன வளாகம் ஒன்றையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அதற்கு அவர்கள் `வலேரியானா’ என்று பெயரிட்டுள்ளனர். `லிடார்’ (Lidar) என்னும் லேசர் சென்சார் கருவியைப் பயன்படுத்தி, பூமிக்கு அடியில் புதைந்துபோன கட்டமைப்புகளை ஆய்வாளர்கள் வரைபடமாக்கி வருகின்றனர்.

By admin